FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள்

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் வருவாய்த்துறையால் நடத்தப்படும் அம்மா

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 7:48 am IST
பகிர்:

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் வருவாய்த்துறையால் நடத்தப்படும் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) நடைபெறும் என்று ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அம்மா திட்ட முகாமில் அந்தந்த வட்டாட்சியர் தலைமையில் வருவாய்த்துறையின் அனைத்து அலுவலர்களும் முகாமிட்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெறுவர். ஆகவே, வருவாய்த் துறை சம்பந்தப்பட்ட சான்றிதழ்கள், நலத்திட்ட உதவிகள் பெற இந்த முகாமில் மனுக்கள் அளிக்கலாம்.
முகாம் நடைபெறும் கிராமங்கள்: மேலூர் - கருத்தப்புளியம்பட்டி, உசிலம்பட்டி - பொட்டுலுப்பட்டி, மதுரை கிழக்கு - மாங்குளம் 2-ஆவது பிட், வாடிப்பட்டி - எர்ரம்பட்டி, திருமங்கலம் - கரிசல்காளாம்பட்டி, மதுரை வடக்கு - தத்தனேரி குரூப், பேரையூர் - குடிசேரி, மதுரை தெற்கு - குசவன்குண்டு, மதுரை மேற்கு - விளாச்சேரி, திருப்பரங்குன்றம்-  சாக்கிலிப்பட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments