FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் விழிப்புணர்வு பேரணி

மதுரை அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

மதுரை அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் நலத்துறை சார்பில் தாய்ப்பால் வார விழா கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. தாய்ப்பால் வார விழாவையொட்டி அரசு மருத்துவமனை மகப்பேறு சிகிச்சைப்பிரிவில் பாலூட்டும் தாய்மார்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் பெண்களிடம் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மதுரை ரயில்நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையடுத்து இதன் ஒரு பகுதியாக மதுரை அரசு மருத்துவமனை செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் பங்கேற்ற தாய்ப்பால் விழிப்புணர்வு பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
மதுரை அரசு மருத்துவமனை முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் அனீஸ் சேகர் கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தார். இதில் மருத்துவமனை முதன்மையர் டி.மருதுபாண்டியன், கண்காணிப்பாளர் (பொறுப்பு) சண்முகசுந்தரம், குழந்தைகள் நலத்துறை இயக்குநர் பாலசங்கர், மகப்பேறு சிகிச்சைப்பிரிவு துறைத்தலைவர் சாந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
விழிப்புணர்வு பேரணியில் மதுரை அரசு மருத்துவமனை செவிலியர் பயிற்சி மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அரசு மருத்துவமனை முன்பாக தொடங்கிய பேரணி அண்ணா பேருந்து நிலையம் சென்று பின்னர் மீண்டும் மதுரை அரசு மருத்துவமனையை வந்தடைந்தது. பேரணியில் பங்கேற்ற மாணவிகள் தாய்ப்பாலின் பலன்கள் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி முழக்கமிட்டுச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments