FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சக்குடியில் கண்டெடுக்கப்பட்ட சுவாமி சிலைகள் பறிமுதல்

மதுரை கிழக்கு வட்டம், சக்குடி கிராமத்தில் நிலத்துக்கு அடியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சுவாமி சிலைகளை, வருவாய்த் துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

மதுரை கிழக்கு வட்டம், சக்குடி கிராமத்தில் நிலத்துக்கு அடியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சுவாமி சிலைகளை, வருவாய்த் துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
சக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுலோச்சனா தேவி. இவர், அப்பகுதியில் நிலத்துக்கு அடியில் இருந்து கண்டெக்கப்பட்ட சுவாமி சிலைகளை தனது வீட்டில் வைத்து பூஜை செய்வது வருவதாக வருவாய்த் துறையினருக்கு புகார் கிடைத்தது. அதையடுத்து, மதுரை கிழக்கு வட்டாட்சியர் சோமசுந்தர சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் சக்குடி கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், கிராமக் கணக்குகளின்படி அங்குள்ள அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் அரசுப் புறம்போக்கு நிலத்தில் இருந்து இரண்டரை அடி உயர பெருமாள் சிலை, இரண்டு அடி உயர பெண் தெய்வம் சிலைகள்- 2, ஒன்றரை அடி உயர விஷ்ணு சக்கரம் சிலை மற்றும் 3 உலோக பீடங்கள் கண்டெடுக்கப்பட்டு சுலோச்சனா தேவி, தனது வீட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக வைத்து பூஜை செய்தது தெரியவந்தது.
 பூமிக்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் அரசுக்குச் சொந்தமானவை என்பதால் இதுகுறித்து சிலைமான் 
காவல் துறையில் வருவாய்த்துறையினர் புகார் அளித்தனர். பின்னர், சிலைகளை ஒப்படைக்குமாறு சுலோச்சனா தேவிக்கு நோட்டீஸ் அனுப்பினர். 
ஆனால், சிலைகள் ஒப்படைக்கப்படாததால், வட்டாட்சியர் சோமசுந்தர சீனிவாசன் மற்றும் அதிகாரிகள், காவல் துறையினர் முன்னிலையில் சிலைகளை திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். அச்சிலைகள் மதுரை கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments