பன்றிக் காய்ச்சல் பாதிப்பு:தனியார் நிறுவன ஊழியர் சாவு
மதுரையில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தனியார் நிறுவன ஊழியர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இறந்தார்.
மதுரையில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தனியார் நிறுவன ஊழியர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இறந்தார்.
மதுரை ஆரப்பாளையம் பிரதான சாலையைச் சேர்ந்தவர் சுந்தர்(55). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த வாரம் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுந்தர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சையில் குணமாகாததைத் தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை சேர்க்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் சுந்தருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தனி வார்டில் வைத்து தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி சுந்தர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் கூறும்போது, கடந்த சில வாரங்களாக பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனையில் இல்லை. தற்போது பன்றிக்காய்ச்சலால் இறந்த சுந்தர் பன்றிக் காய்ச்சல் முற்றிய நிலையில் திங்கள்கிழமை சேர்க்கப்பட்டார். இதனால் சிகிச்சை பலனளிக்கவில்லை. காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவுடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தால் அவரை குணப்படுத்தியிருக்கலாம் என்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.