மதுரை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட151 கிராம் தங்கக்கட்டி, சங்கிலி பறிமுதல்
துபையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மதுரை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.4.8 லட்சம் மதிப்புள்ள 151.5 கிராம் தங்கக்கட்டி
துபையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மதுரை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.4.8 லட்சம் மதிப்புள்ள 151.5 கிராம் தங்கக்கட்டி மற்றும் சங்கிலியை சுங்கத்துறை நுண்ணறிவுப்பிரிவினர் பறிமுதல் செய்தனர்.
துபையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை மதுரை வரும் பயணிகள் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை நுண்ணறிவுப்பிரிவினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சுங்கத்துறை நுண்ணறிவுப்பிரிவு உதவி ஆணையர் வெங்கடேஷ்பாபு தலைமையிலான அதிகாரிகள், விமானத்தில் வந்த பயணிகளை சோதனையிட்டனர். அதில் விழுப்புரத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் உதயகுமார்(25) தனது உள்ளாடையில் 151.5 கிராம் எடையுள்ள தங்கக் கட்டி மற்றும் சங்கிலி ஆகியவற்றை மறைத்து வைத்து கொண்டு வந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.4.8 லட்சமாகும். இதையடுத்து சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவினர் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.