ஹெச்ஐவி பாதித்த பெண்ணுக்கு அமைச்சர் ஆறுதல்
ஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனை சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று
ஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனை சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வரும் சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.2 லட்சத்தை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது: பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் தங்கப்பாண்டி, சாத்தூர் படந்தாலில் அரசு நிலம் வேண்டும் என்று என்னிடம் கோரிக்கை வைத்தார்.
இதுதொடர்பாக விருதுநகர் ஆட்சியரிடம் உடனடியாக பேசி அவர் கேட்ட இடமே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவுடன் அந்த பெண்ணின் கணவருக்கு ஓட்டுநர் வேலையும், பெண்ணுக்கு தகுந்த வேலையும் வழங்கப்படும் என்றார்.
மருத்துவமனை முதல்வர் எஸ்.சண்முகசுந்தரம், மருத்துவ கண்காணிப்பாளர் ராஜா மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.