FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

திருப்பாலை, வண்டியூர், நரசிங்கம்பட்டி பகுதிகளில் ஜூன் 26 மின்தடை

மதுரை திருப்பாலை, வண்டியூர், நரசிங்கபுரம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 26) மின்தடை ஏற்படும்.

Updated On : 26 ஜூன் 2018, 7:41 am IST
பகிர்:

மதுரை திருப்பாலை, வண்டியூர், நரசிங்கபுரம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 26) மின்தடை ஏற்படும்.
இதுகுறித்து மதுரை மின்பகிர்மான வட்டம் வடக்கு பெருநகர் செயற்பொறியாளர் ஜீ.மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
மதுரை திருப்பாலை, வண்டியூர், புதூர் மற்றும் எம்.ஜி.நகர் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. எனவே, துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. 
மின்தடை ஏற்படும் பகுதிகள்: திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திகுளம், அய்யர்பங்களா, வள்ளுவர் நகர், விஸ்வநாதபுரம், மகாத்மா காந்தி நகர், முல்லை நகர், சிவக்காடு, குலமங்கலம், கிருஷ்ணாபுரம் காலனி, பீபீகுளம், மருதுபாண்டியன் நகர், கண்ணனேந்தல், சூரியா நகர், ஊமச்சிகுளம், அலங்காநல்லூர், தேசிய சர்க்கரை ஆலை, வலையபட்டி, கடச்சனேந்தல், மண்மலைமேடு, மூன்றுமாவடி, மகாலட்சுமி நகர், ஆனையூர், பணங்காடி, மீனாட்சிபுரம்.
பாரதி உலா சாலை, வல்லபபாய் சாலை, ஜவஹர்ரோடு, பெசன்ட் ரோடு, சின்னசொக்கிகுளம், பட்டரைக்காரத் தெரு, டி.ஆர்.ஓ.காலனி, தெற்கு புதுநத்தம் சாலை, புதூர் வண்டிப்பாதை, பாலமந்திரம், ரத்தினசாமி நாடார் சாலை, விசாலாட்சிபுரம் பகுதி, நரிமேடு, கட்டபொம்மன் நகர், போஸ் வீதி, மீனாம்பாள்புரம், அழகர்கோவில் சாலை,  தமுக்கம் முதல் புதூர் ஐ.டி.ஐ. பேருந்து நிறுத்தப் பகுதி வரை.
வண்டியூர், பி.கே.எம்.நகர், மானகிரி, செளராஷ்டிரபுரம், யாகப்பா நகர், சதாசிவம் நகர், கருப்பாயூரணி, காளிகாப்பான், சீமான் நகர், பாண்டியன் கோட்டை, பாண்டி கோவில், மஸ்தான்பட்டி, கிழக்கு அண்ணாநகர், வீரபாஞ்சன், பூலான்குளம், ஆண்டார்கொட்டாரம், ஒத்த வீடு, இளமனூர், புதூர் பகுதி, எல்.கே.டி.நகர், கல்மேடு உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அதில் கூறப்பட்டுள்ளது.
நரசிங்கம்பட்டியில்: நரசிங்கம்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும் பகுதிகள்: நரசிங்கம்பட்டி, தெற்குத்தெரு, வெள்ளரிப்பட்டி, டி.வெள்ளாளப்பட்டி, மருதூர், ஆமூர், பூஞ்சுத்தி, இடையப்பட்டி, வேப்படப்பு, வலச்சிக்குளம்,  அரிட்டாபட்டி,  எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, மேலவளவு, பட்டூர், கேசம்பட்டி, சுற்று வட்டாரப் பகுதிகள். இத்தகவலை மதுரை கிழக்கு மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பெ.குமார் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments