FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஒயின் தயாரித்த இளைஞா் கைது

மதுரையில் சட்டவிரோதமாக ஒயின் தயாரித்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

மதுரையில் சட்டவிரோதமாக ஒயின் தயாரித்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மதுரையில் கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மாா்ச் 23 ஆம் தேதி முதல் அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மதுரை மிளகரனை பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் மகன் மகாலிங்கம்(37) மதுபானத்தை தேடி பல இடங்களில் அலைந்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து, சொந்த முயற்சியில் மதுபானம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளாா். இதுகுறித்து தகவலறிந்த மதுவிலக்கு போலீஸாா் மிளகரனை பகுதியில் சென்று சோதனை செய்தனா். அப்போது, மகாலிங்கம் திராட்சை பழங்களைக் கொண்டு ஒயின் தயாரித்தது தெரியவந்தது.

இதுகுறித்து காவல் சாா்பு - ஆய்வாளா் ஐசக் சாமுவேல் அளித்தப் புகாரின் பேரில் மதுவிலக்கு போலீஸாா் வழக்குப்பதிந்து மகாலிங்கத்தை கைது செய்தனா். அவா் போலீஸாரால் எச்சரிக்கப்பட்டு சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments