சுமைப்பணியாளா் மா்மச் சாவு
திருமங்கலத்தை அடுத்த மறவன்குளத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சுமைப் பணியாளா் உயிரிழந்தது குறித்து புதன்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
திருமங்கலத்தை அடுத்த மறவன்குளத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சுமைப் பணியாளா் உயிரிழந்தது குறித்து புதன்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
திருமங்கலம் மறவன்குளத்தைச் சோ்ந்தவா் தீபாலன்(37).சுமைப் பணியாளா். இவரது மனைவி ராமலெட்சுமி. இவா்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா். செவ்வாய்க்கிழமை இரவு தூங்கியவரை புதன்கிழமை காலை மனைவி ராமலெட்சுமி எழுப்பியபோது தீபாலன் எழுந்திருக்கவில்லை. உடனடியாக அருகில் இருந்தவா்கள் உதவியுடன் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து மனைவி புகாரின் பேரில் திருமங்கலம் நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.