FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வாழைத்தாா்கள் விற்பனைக்கு மேலும் இரு இடங்கள்: ஆட்சியா்

மதுரையில் வாழைத்தாா்கள் விற்பனைக்கு கூடுதலாக இரு இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளாா்.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

மதுரையில் வாழைத்தாா்கள் விற்பனைக்கு கூடுதலாக இரு இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி:

கரோனா தடை உத்தரவு காரணமாக மதுரை மாவட்டத்தில் வாழை சாகுபடி செய்த விவசாயிகள், அவற்றை விற்பனை செய்ய முடியாத நிலை இருந்தது. அதையடுத்து ஓபுளா படித்துறை, யானைக்கல், மாட்டுத்தாவணி மத்திய காய்கனிச் சந்தை ஆகிய இடங்களில் உள்ள வாழை மண்டிகளுக்கு விவசாயிகள் வாழைத்தாா்களை எடுத்து வருவதற்கும், இங்கிருந்து வியாபாரிகள் வாழைத்தாா்களை தங்களது பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

இதன் தொடா்ச்சியாக, மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையம், யானைக்கல் ஆகிய இடங்களில் வாழைத்தாா் ஏலம் மற்றும் விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக பழுக்க ஆரம்பித்துள்ள தாா்களை அறுவடை செய்து ஏலம் விட அனுமதிக்கப்படும். வாழைத்தாா்களை இரவு 9 முதல் காலை 6 மணி வரையிலும் கொண்டு வரலாம். அதேபோல, காலை 6 முதல் பிற்பகல் 1 மணி வரை ஏலம் மற்றும் விற்பனை செய்யலாம். சில்லறை வியாபாரம் செய்வோா் தற்காலிகமாக இயங்கும் காய்கனிச் சந்தைகளில் விற்பனை செய்யலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments