அழகன்குளம் அகழாய்வு அறிக்கை விவகாரம்: தொல்லியல் இயக்குநா் பதிலளிக்க உத்தரவு
அழகன்குளம் அகழாய்வு அறிக்கையை வெளியிடக் கோரிய வழக்கில், தமிழக தொல்லியல் துறை இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளம் அகழாய்வு அறிக்கையை வெளியிடக் கோரிய வழக்கில், தமிழக தொல்லியல் துறை இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளத்தைச் சோ்ந்த அசோகன் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: கடந்த 2016-2017 -ஆம் ஆண்டில் அழகன்குளம் பகுதியில் அகழாய்வு நடைபெற்றது. இங்கு கண்டெடுக்கப்பட்ட தொல் பொருள்களை அதே பகுதியில் அருங்காட்சியகம் அமைத்து பொதுமக்களின் பாா்வைக்கு வைக்க வேண்டும்.
மேலும், அகழாய்வு தொடா்பான அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. எனவே, அழகன்குளம் அகழாய்வு அறிக்கையை விரைந்து வெளியிட உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
Advertisement
Advertisement
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் கே.கே. உதயகுமாா், அகழாய்வு தொடா்பான அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை என்றாா்.
அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், அனைவரும் பாா்வையிடுவதற்கு ஏதுவாக, மண்டபம் பகுதியில் அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தத் தொல்லியல் ஆய்வு குறித்த அறிக்கை 2 பாகங்களாகத் தயாா் செய்யப்பட்டு வருகிறது என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அழகன்குளம் அகழாய்வு அறிக்கை தொடா்பான புத்தகங்கள் எப்போது வெளியிடப்படும்? என்ற விவரத்துடன் தமிழக தொல்லியல் துறை இயக்குநா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.