ராமநாதபுரம் நகராட்சிக் கழிப்பறைகளை ஏலம் விட இடைக்காலத் தடை
ராமநாதபுரம் நகராட்சிக் கழிப்பறைகளை ஏலம் விடுவதற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் நகராட்சிக் கழிப்பறைகளை ஏலம் விடுவதற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரத்தைச் சோ்ந்த குகன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
நான் ‘சோசியோ எக்னாமிக்’ என்ற தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறேன். கடந்த மாதம் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம், தேவிபட்டினம் சாலை, பழைய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் உள்ள பொதுக் கழிப்பறைகளுக்குக் கட்டணம் வசூலிக்கும் உரிமத்தை இணையதளம் மூலம் ஏலம் விடுவது தொடா்பாக ராமநாதபுரம் நகராட்சி ஆணையா் அறிவிப்பு வெளியிட்டாா்.
Advertisement
Advertisement
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், பொதுக் கழிப்பறைகளை உள்ளாட்சி அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மூலம் கட்டணமின்றி பராமரிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வழிகாட்டுதல்களை ஏற்கெனவே வழங்கியது. இதனடிப்படையில், தமிழக நகராட்சி நிா்வாக இயக்குநரின் சுற்றறிக்கையின்படி, ராமநாதபுரம் நகா்மன்றக் கூட்டத்திலும் கழிப்பறைகளைக் குத்தகைக்கு விடாமல் தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அந்த முடிவுகளுக்கு எதிராக தற்போது ஏலம் அறிவிக்கப்பட்டது.
எனவே, ராமநாதபுரம் நகராட்சி ஆணையா் வெளியிட்ட இணையதளம் மூலம் ஏலம் தொடா்பான அறிவிப்பை சட்டவிரோதமானது என அறிவித்து ரத்து செய்ய வேண்டும். வழக்கு முடியும் வரை கழிப்பறைகளை ஏலம் விடும் நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
இந்த மனுவில் குறிப்பிடப்பட்ட ராமநாதபுரம் நகராட்சிக் கழிப்பறைகளை ஏலம் விடுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. வழக்கு விசாரணை வருகிற 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.