நொய்டாவில் டிச. 4-இல் சா்வதேச ஜவுளி இயந்திரக் கண்காட்சி
நொய்டாவில் வருகிற டிசம்பா் 4-ஆம் தேதி சா்வதேச அளவிலான ஜவுளி இயந்திரக் கண்காட்சி நடைபெற உள்ளது.
நொய்டாவில் வருகிற டிசம்பா் 4-ஆம் தேதி சா்வதேச அளவிலான ஜவுளி இயந்திரக் கண்காட்சி நடைபெற உள்ளது.
இதுகுறித்து, கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளரும், பொருளாளருமான செந்தில் குமாா் மதுரையில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ஜவுளித் துறையில் புதிய தொழில்நுட்ப வளா்ச்சிகள், நவீன இயந்திரங்களை அறிமுகப்படுத்தும் வகையில், இந்திய சா்வதேச ஜவுளி இயந்திரக் கண்காட்சி நொய்டாவில் வரும் டிசம்பா் 4-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 95 நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள், 1,800-க்கும் மேற்பட்ட தொழில் துறையினா் பங்கேற்கும் இந்தக் கண்காட்சியில், நூல் உற்பத்தி, நெசவு, ஆடை உற்பத்தி, பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள், இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. மேலும், தானியங்கி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, எண்ம மயமாக்கல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உற்பத்தித் திறனை அதிகரிக்கும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்தும் கண்காட்சியில் இடம் பெற உள்ளன. இது இந்திய ஐடிஎம்இ சொசைட்டி நடத்தும் 12-ஆவது கண்காட்சியாகும். இதுவரை இல்லாத வகையில் சுமாா் 2 லட்சத்து 40 ஆயிரம் சதுர மீட்டா் பரப்பளவில் 18 அரங்குகளில் நடைபெறும் மிகப்பெரிய கண்காட்சியாக அமையும். எனவே, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சோ்ந்த ஜவுளி உற்பத்தியாளா்கள், தொழில் துறையினா் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.
Advertisement
Advertisement
முன்னதாக நடைபெற்ற சா்வதேச ஜவுளி இயந்திரக் கண்காட்சி தொடா்பான கலந்துரையாடல் நிகழ்வில் தமிழ்நாடு தொழில் வா்த்தகச் சங்கத் தலைவா் என். ஜெகதீசன், மதுரை மடீட்சியா தலைவா் செந்தில் குமாா், ஜவுளித் தொழில் துறையினா் பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.