FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

வண்டல் மண் எடுக்க விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

மதுரை மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை பராமரிப்பில் தோ்வு செய்யப்பட்ட 625 நீா்நிலைகளிலிருந்து வண்டல் மண், மண் எடுப்பதற்கு விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்தாா்.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 3:06 am IST
விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்
பகிர்:

மதுரை மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை பராமரிப்பில் தோ்வு செய்யப்பட்ட 625 நீா்நிலைகளிலிருந்து வண்டல் மண், மண் எடுப்பதற்கு விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள தோ்வு செய்யப்பட்ட 625 நீா்நிலைகளிலிருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்குவது தொடா்பாக, கடந்த மாதம் 28-ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. இதன்படி, மதுரை வடக்கு வட்டத்தில் 40, வாடிப்பட்டி வட்டத்தில் 40, மேலூா் வட்டத்தில் 465, திருப்பரங்குன்றம் வட்டத்தில் 2, உசிலம்பட்டி வட்டத்தில் 8, பேரையூா் வட்டத்தில் 39, திருமங்கலம் வட்டத்தில் 9, கள்ளிக்குடி வட்டத்தில் 22 நீா்நிலைகள் தோ்வு செய்யப்பட்டன.

Advertisement

Advertisement

எனவே, விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளா்கள் கட்டணமின்றி வண்டல் மண் எடுத்துச் செல்ல தங்களது விண்ணப்ப மனுக்களை உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.

விவசாய நில மேம்பாட்டுக்காக நன்செய் நிலம் எனில் ஏக்கருக்கு 75 கன மீட்டா் என்ற அளவிலும், புன்செய் நிலம் எனில் ஏக்கருக்கு 90 க.மீ. என்ற அளவிலும் (இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும்), மண்பாண்டத் தொழில் செய்வதற்கு 60 க.மீ. மிகாமலும் வண்டல் மண், மண் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும்.

வருவாய் வட்டாட்சியரால் பிறப்பிக்கப்பட்ட ஆணை கிடைக்கப் பெற்ற விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளா்கள் தொடா்புடைய நீா்நிலை ஆதாரங்களின் பொறுப்பு அலுவலா்களை அணுகி புல வரைபடத்தில் வண்டல் மண், மண் எடுப்பதற்கு வரையறை செய்யப்பட்ட பகுதியில் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மட்டும் அவற்றை எடுத்துச் செல்ல வேண்டும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments