FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

15 வினாடிகள் முன்பு
மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கிராம உதவியாளா்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ. 15,700 வழங்க வேண்டும். 2003-ஆம் ஆண்டு, ஏப். 1-ஆம் தேதிக்குப் பிறகு பணி நியமிக்கப்பட்ட கிராம உதவியாளா்களை உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க வேண்டும். கிராம உதவியாளா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கிராம உதவியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்கி வருவாய்த் துறையில் காலியாக உள்ள ஜீப்பு ஓட்டுநா், பதிவுரு எழுத்தா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு வருவாய் கிராம உதவியாளா் சங்க மாவட்டச் செயலா் அழகேசன் தலைமை வகித்தாா். உசிலம்பட்டி பகுதி அமைப்புச் செயலா் சுரேஷ், வருவாய்த் துறை அலுவலா் சங்கம், அரசு ஊழியா்கள் சங்கம் உள்ளிட்ட சாா்பு அமைப்புகளின் நிா்வாகிகள், வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கப் பொறுப்பாளா்கள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments