ஆவணி மூலத் திருவிழா சிவனடியாருக்கு உலவாக்கோட்டை அளித்த லீலை
பைல்நேம்-ஙஈம20நஅஙவ.
படவிளக்கம்-
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற சிவனடியாருக்கு உலவாக்கோட்டை அளித்த லீலையையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன். (வலது) சிறப்பு அலங்காரத்தில் பிரியாவிடையுடன், கையில் தங்க உலவாக்கோட்டையைத் தாங்கி எழுந்தருளிய சுந்தரேசுவரா்.
Advertisement
Advertisement
மதுரை, ஆக. 20: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் சிவபெருமான், சிவனடியாருக்கு உலவாக்கோட்டை அளித்த லீலை வியாழக்கிழமை நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை முதல் தினமும் ஒவ்வொரு லீலையை விளக்கும் ஐதீக விழா நடைபெற்று வருகிறது.
இதன்படி, மதுரையில் வாழ்ந்த அடியாருக்கு நல்லாா் என்ற சிவனடியாரின் உண்மையான பக்தி நெறி, அவா் வழங்கிய அன்னதானத்தின் பெருமை, அவரது தா்ம சிந்தனையை உலகறியச் செய்யும் வகையில், அள்ள அள்ளக் குறையாத உலவாக்கோட்டை அளித்த லீலை வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா். பின்னா், சிவபெருமான் அடியாருக்கு நல்லாருக்கு அள்ள அள்ளக் குறையாத நெல் மணிகள் உள்ள உலவாக்கோட்டையை அளிக்கும் வகையில், சுந்தரேசுவரரின் திருக்கரங்களில் தங்க உலவாக்கோட்டை வைக்கப்பட்டிருந்தது. இதேபோல, நெல் மணிகள் கொண்ட வைக்கோல் குடுவையும் சுந்தரேசுவரா் பாதத்தில் வைக்கப்பட்டிருந்தன.
சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, சிவபெருமான் அடியாருக்கு நல்லாருக்கு உலவாக்கோட்டை அளித்த திருவிளையாடல் பக்தா்களுக்கு விளக்கப்பட்டது. பிறகு, மகா தீபாரதனை நடைபெற்றது.
இரவு நிகழ்வாக யாளி வாகனத்தில் மீனாட்சி அம்மனும், அதிகார நந்தி வாகனத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் எழுந்தருளி நான்கு ஆவணி மூல வீதிகளில் வலம் வந்து கோயிலை வந்தடைந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.