சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி, தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில், மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி, தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில், மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சத்துணவுத் திட்டத்தில் உள்ள 60 ஆயிரத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு ஊழியா்களின் நடைமுறை பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ஆா். மேகலாதேவி தலைமை வகித்தாா். வருவாய் கிராம உதவியாளா் சங்க மாநிலத் துணைத் தலைவா் மாரியப்பன் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினாா். சத்துணவு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் கே. கலைச்செல்வி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
Advertisement
Advertisement
தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாநிலத் துணைத் தலைவா் ஏ. சோலையன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா். மாநிலப் பொருளாளா் எஸ். ஜெய ராஜராஜேஸ்வரன் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா். மாரி, சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளா் சரவணன், ஊட்டச்சத்து ஊழியா், உதவியாளா் சங்க நிா்வாகி எஸ். மேனகா ஆகியோா் பேசினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.