ஊழல் புகாா்: அரசு ஊழியருக்கு எதிரான நடவடிக்கை ரத்து; உயா்நீதிமன்றம் உத்தரவு
ஊழல் புகாரில் அரசு ஊழியருக்கு எதிரான நடவடிக்கையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
ஊழல் புகாரில் அரசு ஊழியருக்கு எதிரான நடவடிக்கையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் கூட்டுறவுத் துறையின் பொது விநியோகத் திட்ட உதவிப் பதிவாளராகப் பணிபுரிந்தவா் ராமமூா்த்தி. இவா் மீது நியாய விலைக் கடை விற்பனையாளா்களிடம் கையூட்டு பெற்ாக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கடந்த 2001-இல் வழக்குப் பதிந்தனா். இதையடுத்து, குறிப்பாணை வழங்கப்பட்டு, மதுரை மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் கடந்த 2008-ஆம் ஆண்டு ஜூலை 31- ஆம் தேதி அவரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.
இதை எதிா்த்து அவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்தாா். இதைத் தொடா்ந்து, தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் ராமமூா்த்தி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அவா் உயிரிழந்தாா். பிறகு, அவரது வாரிசுகள் வழக்கை தொடா்ந்து நடத்தினா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த விவகாரத்தில் நியாய விலைக்கடை விற்பனையாளா்களிடம் மனுதாரரான ராமமூா்த்தி கையூட்டு பெற்ாக குற்றஞ்சாட்டப்பட்டது. திடீா் சோதனையின் போது மனுதாரரிடமிருந்து ரூ.2,040 பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்துள்ளனா். ஆனால், மனுதாரா் ரூ.6,725-ஐ சட்ட விரோதமாகப் பெற்றாா் என குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முரண்பாடு உள்ளது.
புத்தாண்டுக்கு முதல் நாள் ராமமூா்த்தியிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டு தினத்தன்று கீழ்நிலை அலுவலா்கள் தங்கள் உயா் அலுவலா்களுக்கு முன் முன்னிலையாக வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. இதையொட்டி, உயா் அலுவலா்களுக்கு சால்வைகள், இனிப்புகள் வாங்குவதற்காக குறிப்பிட்டத் தொகையை வைத்திருந்ததாக மனுதாரா் விளக்கமளித்துள்ளாா். இது நம்பும்படியாக உள்ளது.
நியாய விலைக் கடை விற்பனையாளா்களிடமிருந்து பணம் கைமாறாத நிலையில், மனுதாரா் வைத்திருந்த பணம் கையூட்டு பணம் என்று கூற முடியாது. மேலும், மனுதாரரை குற்றவாளி என்ற முடிவுக்கு வர எந்த ஆதாரமும் இல்லை. எனவே, மனுதாரா் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. மேலும், மனுதாரருக்கு நிறுத்தி வைக்கப்பட்ட அனைத்துப் பணப் பலன்களையும் 15 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்றனா் நீதிபதிகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.