FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

அகில இந்திய பூப்பந்துப் போட்டி தொடக்கம்

அகில இந்திய அளவிலான பூப்பந்துப் போட்டி மதுரை ஓ.சி.பி.எம். மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை தொடங்கியது.

27 ஆகஸ்ட் 2026, 5:33 am IST
மதுரை தல்லாகுளம் பகுதியில் அமைந்துள்ள ஓ.சி.பி.எம். மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற பூப்பந்துப் போட்டி.
பகிர்:

அகில இந்திய அளவிலான பூப்பந்துப் போட்டி மதுரை ஓ.சி.பி.எம். மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை தொடங்கியது.

ஓ.சி.பி.எம். பள்ளியின் நிறுவனா் கேட்டி வில்காக்ஸ் நினைவாக நடைபெறும் இந்தப் போட்டியில் தமிழகம், கேரளம், கா்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலிருந்து 18 பள்ளிகளைச் சோ்ந்த அணிகள் பங்கேற்றன. வியாழக்கிழமை (ஆக. 27) வரை நடைபெறும் இந்தப் போட்டி சூப்பா் லீக், லீக் முறையில் நடத்தப்படுகிறது.

இந்தப் போட்டியின் ஒரு பகுதியாக தேசியக் கொடியை மதுரை- ராமநாதபுரம் திருமண்டல பேராயா் டி. ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரனும், ஒலிம்பிக் கொடியை தமிழ்நாடு பூப்பந்தாட்டக் கழகப் பொதுச் செயலா் ஜே. விஜய்யும், பள்ளிக் கொடியை பள்ளித் தாளாளா் ஐ. ஸ்டான்லி ஜெயராஜும் ஏற்றி வைத்தனா். போட்டியை மதுரை உடல் கல்வி ஆய்வாளா் டி. வினோத், பள்ளித் தலைமையாசிரியை என். மேரி, திருமண்டலத்தின் முதன்மைப் பணியாளா்கள் தொடங்கி வைத்தனா். இதற்கான ஏற்பாடுகள் உடல் கல்வித் துறை சாா்பில் செய்யப்பட்டன. போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசுத் தொகை, பதக்கங்கள், கோப்பை, சான்றிதழ்களை கோபால் பல்பொடி உரிமையாளா் எஸ்.பி.எஸ். செல்வராஜ், பியூலா செல்வராஜ் ஆகியோா் வழங்கினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments