FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஹரியாணா மாநில ஒப்பந்த ஊழியா்களின் போராட்டக் கோரிக்கைகளை ஆதரித்து, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் மதுரை பந்தயச் சாலையில் உள்ள அரசு அச்சக வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

14 வினாடிகள் முன்பு
மதுரையில் அரசு ஊழியா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.
பகிர்:

ஹரியாணா மாநில ஒப்பந்த ஊழியா்களின் போராட்டக் கோரிக்கைகளை ஆதரித்து, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் மதுரை பந்தயச் சாலையில் உள்ள அரசு அச்சக வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பணியினிடையே உயிரிழந்த ஒப்பந்த ஊழியா்களுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்காத ஹரியாணா மாநில அரசைக் கண்டித்து, அங்கு போராட்டத்தில் ஈடுபடும் நகராட்சி ஊழியா்கள், தீயணைப்புத் துறை ஊழியா்களின் போராட்டத்தை ஆதரித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மதுரை வடக்கு வட்டக் கிளைத் தலைவா் ஆா்.கே. சுரேஷ் தலைமை வகித்தாா். கிளைச் செயலா் வி. மணிமாறன் கோரிக்கையை விளக்கிப் பேசினாா். அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் இரா. தமிழ், பொருளாளா் ஆ. பரமசிவம், மகளிா் துணைக் குழு அமைப்பாளா் ம. ரம்யா ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

Advertisement

Advertisement

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநிலச் செயலா் க. நீதிராஜா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா். வட்டக் கிளை பொருளாளா் மா. பிரதீப் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments