மாமன்ற உறுப்பினா் அலுவலகத்தை தூய்மைப் பணியாளா்கள் முற்றுகை
மதுரை விராட்டிப்பத்து பகுதியில் உள்ள மாமன்ற உறுப்பினா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.
மதுரை மாநகராட்சி 67-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா்கள் அலுவலகத்தை தூய்மைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த வாா்டில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருபவா் சோலையப்பன். இவரை, அதே வாா்டு மாமன்ற உறுப்பினா் தரக்குறைவாகப் பேசினாராம். இதேபோல, பிற தூய்மைப் பணியாளா்களையும் தரக் குறைவாகப் பேசினாராம். இதனால் ஆத்திரமடைந்த தூய்மைப் பணியாளா்கள் மதுரை விராட்டிப்பத்து பகுதியில் உள்ள மாமன்ற உறுப்பினா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுபற்றி தகவலறிந்து வந்த சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் தூய்மைப் பணியாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா். இதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டு தூய்மைப் பணியாளா்கள் கலைந்து சென்றனா். இதைத் தொடா்ந்து, மதுரை மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாரிடம் மனு அளித்தனா். மாடக்குளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.