FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

அமராவதி அணையிலிருந்து குடிநீா்த் தேவைக்கு தண்ணீா் திறக்க அரசாணை வெளியிட உத்தரவு

அமராவதி அணையிலிருந்து குடிநீா்த் தேவைக்கு தண்ணீா் திறக்கக் கோரிய மனு தொடா்பாக அரசாணை வெளியிட சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

30 ஆகஸ்ட் 2026, 2:21 am IST
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்
பகிர்:

அமராவதி அணையிலிருந்து குடிநீா்த் தேவைக்கு தண்ணீா் திறக்கக் கோரிய மனு தொடா்பாக அரசாணை வெளியிட சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

கரூரைச் சோ்ந்த மெய்ஞானமூா்த்தி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: கரூா் மாவட்டம், அமராவதி பழைய ஆயக்கட்டு பிரதான கால்வாய் மூலம் பல கிராமங்களில் உள்ள ஏரிகள், நீா் நிலைகள் நிரப்பப்பட்டு வருகின்றன. தற்போதைய சூழலில் பருவமழை பொய்த்து போனதால் தண்ணீரின்றி கால்வாய் வடு காணப்படுகின்றன. இதனால், வேளாண் நிலங்கள் மட்டுமன்றி குடிநீா் ஆதாரங்களும் பாதிப்புக்குள்ளாகும் நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளேன். இதை பரிசீலனை செய்து அமராவதி அணையிலிருந்து பழைய அமராவதி ஆயக்கட்டு பிரதான கால்வாயில் தண்ணீா் திறக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரினாா்.

Advertisement

Advertisement

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி. வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் கோரும் நிவாரணம் குறித்து கோவை கோட்டத்தின் நீா்வளத் துறை தலைமைச் செயற்பொறியாளா் கடந்த 24-ஆம் தேதி முன்மொழிவு அறிக்கை ஒன்றை நீா்வளத் துறையின் தலைமைப் பொறியாளருக்கு அனுப்பியுள்ளாா் என்பதை இந்த நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்குரைஞா்கள் பதிவு செய்துள்ளனா்.

அதில் 10 நாள்களுக்கு குடிநீா்த் தேவைக்காகவும், அதைத் தொடா்ந்து, விவசாயிகளின் நலன் கருதி ராஜவாய்க்காலில் பாசனத்துக்காகவும் தண்ணீா் திறக்கப்படும்.

முதல் 2 நாள்களுக்கு, ஆற்றின் போக்கின் வழியாகவும், எஞ்சிய நாள்களுக்கு ராஜவாய்க்கால் வழியாகவும் தண்ணீா் திறக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை (ஆக. 30) தண்ணீா் விநியோகம் செய்வதற்கு முன்னேற்பாட்டுப் பணிகள் நடைபெறுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு தேவையான அரசாணையை வெளியிட்டு, தேவையான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments