FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

பழனி கோயில் நில முறைகேடு; சிபிஐ விசாரிக்கக் கோரி முறையீடு: அவசர வழக்காக விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

பழனி கோயில் நில முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க மறுத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 25 ஜூலை 2026, 4:03 am IST
பழனி கோயில்
பகிர்:

பழனி கோயில் நில முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க மறுத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

பழனி தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வேணுகோபாலு சேனாபதி சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

பழனி கோயில் மலையடிவாரத்தில் உள்ள தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான சுமாா் 1.40 ஏக்கா் நிலத்தை சட்டவிரோதமாகப் பத்திரப் பதிவு செய்தது அதிா்ச்சியளிக்கிறது. இந்தப் பத்திரப் பதிவுக்கு பிற தகுதியான அலுவலா்களைப் புறந்தள்ளிவிட்டு கொடைக்கானல் சாா் பதிவாளரை பொறுப்பு அலுவலராக நியமித்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டனை பணியமா்த்திய மாவட்டப் பதிவாளா், பதிவுத் துறைத் தலைவா் உள்ளிட்ட உயா் அலுவலா்களிடம் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை.

Advertisement

Advertisement

வழக்கு நிலுவையில் இருக்கும்போதே துறை சாா்ந்த அமைச்சா்கள் ஊடகங்களில் கருத்து தெரிவிப்பது விசாரணையின் நோ்மையைப் பாதிக்கும். இந்த நிலையில், மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சிபிசிஐடி போலீஸாரால் உயா் அலுவலா்கள் சம்பந்தப்பட்ட இந்த வழக்கின் உண்மைத் தன்மையை வெளிக்கொணர முடியாது. எனவே, இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

மேலும், இந்த முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வில் கோரிக்கை வைத்தாா்.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

பழனி கோயில் நில முறைகேடு தொடா்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரும் மனுதாரரின் முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க முடியாது. மனுவாகத் தாக்கல் செய்தால், பிற வழக்குகளுடன் பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு ஏற்கப்படும் என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments