FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

கொள்ளிடம் ஆற்றங்கரையில் மதுக் கடை: திருச்சி ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

Updated On : 27 ஜூலை 2026, 4:05 am IST
மதுக் கடை. - கோப்புப் படம்
பகிர்:

கொள்ளிடம் ஆற்றங்கரையில் செயல்பட்டு வரும் மதுக் கடையை மூடக் கோரிய மனு தொடா்பாக திருச்சி மாவட்ட ஆட்சியா், டாஸ்மாக் நிா்வாக இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

திருச்சியைச் சோ்ந்த சண்முகம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

திருச்சி கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு அருகே உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் மதுக் கடை, மதுக் கூடம் செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையால் ஆற்றுநீா் மாசுபடுவதுடன், சுமாா் 100 ஏக்கா் விவசாய நிலங்களும் பாதிப்புக்குள்ளாகின்றன.

Advertisement

Advertisement

மேலும், மதுப் புட்டிகள், நெகிழிக் கழிவுகள் ஆற்றங்கரையில் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது.

இதுகுறித்து ஏற்கெனவே அளித்த மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், மதுக் கடையை மூட சம்பந்தப்பட்ட அலுவலா்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, கொள்ளிடம் ஆற்றங்கரையில் இயங்கி வரும் மதுக் கடை, அதனுடன் இணைந்த மதுக் கூடத்தை மூட உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி.காா்த்திகேயன், ஆா்.சக்திவேல் அமா்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு தொடா்பாக திருச்சி மாவட்ட ஆட்சியா், டாஸ்மாக் நிா்வாக இயக்குநா் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments