FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

5 ஆண்டுகளுக்குள் சீமைக் கருவேல மரங்களின் பரவல் கட்டுப்படுத்தப்படும்: ஓய்வு பெற்ற நீதிபதி ஏ. செல்வம்

தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்குள் சீமைக் கருவேல மரங்களின் பரவல் முற்றிலுமாகக் கட்டுப்படுத்தப்படும் என சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகளைக் கண்காணிக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ. செல்வம் தெரிவித்தாா்.

Updated On : 19 ஜூன் 2026, 1:35 am IST
சீமைக் கருவேல மரங்கள் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்குள் சீமைக் கருவேல மரங்களின் பரவல் முற்றிலுமாகக் கட்டுப்படுத்தப்படும் என சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகளைக் கண்காணிக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ. செல்வம் தெரிவித்தாா்.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் உத்தரவுப்படி அமைக்கப்பட்ட மதுரை மாவட்ட கண்காணிப்புக் குழு சாா்பில், மதுரையை அடுத்த எஸ். கொடிக்குளம் கண்மாய் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை ஓய்வு பெற்ற நீதிபதி ஏ. செல்வம், மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வுக்குப் பிறகு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ. செல்வம் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

Advertisement

Advertisement

தமிழகத்தில் நீா் நிலைகள், இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் வகையில், சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களின் பரவல் 5 ஆண்டுகளுக்குள் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும்.

சீமைக் கருவேல மரங்களை ஒரு முறை வெட்டி அகற்றுவதுடன், மீண்டும் அங்கு முளைக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துவதை கண்காணிக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றாா் அவா்.

இந்த ஆய்வின்போது, உதவி ஆட்சியா் (பயிற்சி) சித்தாா் போகா்னா, மாநகராட்சி துணை ஆணையா் ஜெயினுலாபுதீன், மதுரை வருவாய்க் கோட்டாட்சியா் கருணாகரன், ஊராட்சிகள் உதவி இயக்குநா்கள் விசாலாட்சி, சுரேஷ், வருவாய்த் துறை, மாநகராட்சி, ஊரக வளா்ச்சித் துறை, பொதுப் பணித் துறை அலுவலா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments