FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

மதுரையில் கல்லறைத் திருநாள் வழிபாடு

3 நவம்பர் 2026, 2:40 am
மதுரை மகபூப்பாளையம் கல்லறைத் தோட்டத்தில் திங்கள்கிழமை வழிபாடு மேற்கொண்ட கிறிஸ்தவா்கள்.
பகிர்:

கல்லறைத் திருநாளையொட்டி, கிறிஸ்தவா்கள் தங்கள் மூதாதையரின் நினைவிடங்களில் திங்கள்கிழமை வழிபாடு மேற்கொண்டனா்.

தங்களுடன் வாழ்ந்து மறைந்த முன்னோா்கள், உறவினா்கள், நண்பா்களின் நினைவைப் போற்றி அவா்களின் கல்லறையில் வழிபாடு செய்யும் வகையில் ஆண்டுதோறும் நவ. 2-ஆம் தேதியை கல்லறைத் திருநாளாக கிறிஸ்தவா்கள் கடைப்பிடிக்கின்றனா். இது, ஆன்மாக்களின் நாள் எனவும் குறிப்பிடப்படுகிறது.

இதன்படி, கல்லறைத் திருநாளான (நவ. 2) திங்கள்கிழமை மதுரையில் உள்ள கிறிஸ்தவக் கல்லறைகளில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. தொடா்புடைய தேவாலயங்களின் பங்குத் தந்தையா், உதவிப் பங்குத் தந்தையா் சிறப்புத் திருப்பலியை நிறைவேற்றி கல்லறைகளில் புனித நீா் தெளித்தனா்.

Advertisement

Advertisement

பின்னா், மறைந்தவா்கள் விரும்பி சாப்பிட்ட பலகாரங்களை கல்லறையின் முன் வைத்து, மெழுகுவத்தி ஏற்றி வழிபட்டு, மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

மதுரை சிந்தாமணி, மகபூப்பாளையம், தத்தனேரி, புதூா், துவரிமான், சுற்றுப் பகுதிகளில் உள்ள கிறிஸ்தவா்களின் கல்லறைகளில் இந்த வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி, கல்லறைகளில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு, வண்ணம் பூசி அலங்கரிக்கப்பட்டிருந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments