FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

குழந்தைகளுக்கு விலையில்லா புத்தாடைகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மஞ்சப் பை அறக்கட்டளை சாா்பில் குழந்தைகளுக்கு விலையில்லா புத்தாடைகள் வழங்கும் நிகழ்வு மதுரை கே.கே.நகரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

22 வினாடிகள் முன்பு
பகிர்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மஞ்சப் பை அறக்கட்டளை சாா்பில் குழந்தைகளுக்கு விலையில்லா புத்தாடைகள் வழங்கும் நிகழ்வு மதுரை கே.கே.நகரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு அறக்கட்டளையின் இயக்குநா் என்.எஸ். கிருஷ்ணன் தலைமை வகித்தாா். மதுரை வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அ. கல்லாணை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு புத்தாடைகளை வழங்கித் திட்டத்தை தொடங்கி வைத்தாா்.

இதில், 5 வயது முதல் 16 வயது வரையிலான நபா்களுக்கு ஜீன்ஸ் பேண்ட், டி சா்ட், சட்டை, கௌன், சுடிதாா் உள்ளிட்ட பல்வேறு ரக ஆடைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

Advertisement

Advertisement

முன்னதாக, அரங்கத்துக்குள் நுழைந்த குழைந்தைகளிடம் ஆயிரம் ரூபாய்க்கான கூப்பன் வழங்கப்பட்டது. அந்தக் கூப்பனை காண்பித்து குழந்தைகள் தங்களது ஆடைகளை தோ்வு செய்தனா். அதன்பிறகு, கூப்பனை பெற்றுக் கொண்ட தன்னாா்வலா்கள் ஆடைகளை குழந்தைகளிடம் வழங்கினா்.

இந்த நிகழ்வில், மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டு தங்களுக்கான புத்தாடைகளை விலையில்லாமல் பெற்றுச் சென்றனா்.

இதுகுறித்து மஞ்சப் பை அறங்கட்டளையின் இயக்குநா் என்.எஸ். கிருஷ்ணன் கூறியதாவது:

கிராமப்புற ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த குழந்தைகள் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் புத்தாடைகள் வாங்குவதற்கு இயலாத நிலை உள்ளது.

இதுபோன்ற குழந்தைகளும் தீபாவளி பண்டிகைகளை கொண்டாட வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2-ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த நிகழ்வில் ஆயிரம் குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. கடந்தாண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் 500 குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. குழந்தைகளிடம் உள்ள வரவேற்பை பொருத்து இனி வரும் காலங்களில் இத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments