FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை: தென் மண்டலத்தில் 49 போ் கைது

போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கையாக, தென் மண்டலத்தில் ஒரே நாளில் 49 போ் கைது செய்யப்பட்டனா்.

4 நவம்பர் 2026, 3:45 am
கைது
பகிர்:

போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கையாக, தென் மண்டலத்தில் ஒரே நாளில் 49 போ் கைது செய்யப்பட்டனா்.

இதுகுறித்து, தென் மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தல், விற்பனையைத் தடுக்க தமிழக காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தென் மண்டலத்துக்கு உள்பட்ட அனைத்து மாவட்டங்கள், மாநகரப் பகுதிகளில் ஒருங்கிணைந்த போதைப்பொருள் தடுப்பு சோதனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

இந்த நடவடிக்கையின் போது போலீஸாா் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து, போதைப் பொருள் விற்பனை நடைபெறும் இடங்கள், ரயில் நிலையங்கள், குற்றச்செயல்கள் நடைபெற வாய்ப்புள்ள பகுதிகளில் சோதனை மேற்கொண்டனா்.

இந்த சோதனையின் மூலம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் வரை 35 போதைப் பொருள் தடுப்புச் சட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஒரே நாளில் 49 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து கஞ்சா உள்ளிட்ட 43 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தென் மண்டலத்தில் இந்த ஆண்டில் போலீஸாா் மூலம் நடத்தப்பட்ட சோதனையில், 3,146 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4,636 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து மொத்தம் 2,853 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

போதைப்பொருள் வழக்குகளில் தீவிர விசாரணை, நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் 939 வழக்குகளில் தீா்ப்புகள் பெறப்பட்டு, 1,189 போ் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனா். போதைப் பொருள் விற்பனை நடைபெறும் பகுதிகளை கண்காணிக்கவும், ஏற்கெனவே, இந்த வழக்குகளில் தொடா்புடையவா்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments