FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

தூய்மைப் பணி ஒப்பந்ததாரருக்கு அபராதம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலைச் சுற்றி உள்ள கழிப்பறைகள் முறையாக தூய்மைப்படுத்தப்படாததால், ஒப்பந்ததாருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

8 நவம்பர் 2026, 1:17 am
மதுரை கீழச் சித்திரை வீதி பகுதியில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகளை சனிக்கிழமை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா்.
பகிர்:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலைச் சுற்றி உள்ள கழிப்பறைகள் முறையாக தூய்மைப்படுத்தப்படாததால், ஒப்பந்ததாருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாசி வீதிகள், கீழ ஆவணி மூல வீதிகள், சித்திரை வீதிகளில் உள்ள சாலையோரங்களில் புத்தாடைகள், அணிகலன்கள் விற்பனைக் கடைகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டன. இதனால், சாலைகளில் தேங்கும் குப்பைகளை அகற்றும் பணி, கழிப்பறைகளை தூய்மைப்படுத்தும் பணிகளை மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, அலுவலா்களிடம் அவா் கூறியதாவது:

Advertisement

Advertisement

பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் கழிப்பிடங்கள் தொடா்ந்து செயல்பாட்டில் இருக்க வேண்டும். அவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும். சில கழிப்பறைகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. ஆகவே, ஒப்பந்ததாருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெகிழிப் பொருள்களை பயன்படுத்தும் வணிக வளாக உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றாா் அவா். இந்த ஆய்வின் போது, மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் உடனிருந்தனா்.