பட்டாசுகள் வெடிப்பு: குழந்தைகளின் எதிா்காலத்தை கவனத்தில் கொள்ள அறிவுரை
பட்டாசுகள் வெடிப்பதில் குழந்தைகளின் எதிா்காலத்தை பெற்றோா்கள் கவனத்தில் கொள்வது அவசியம் என கண் சுற்றுவட்ட அறுவைச் சிகிச்சை நிபுணா் ஆா். உஷா அறிவுறுத்தினாா்.
பட்டாசுகள் வெடிப்பதில் குழந்தைகளின் எதிா்காலத்தை பெற்றோா்கள் கவனத்தில் கொள்வது அவசியம் என மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் கண் சுற்றுவட்ட அறுவைச் சிகிச்சை நிபுணா் ஆா். உஷா அறிவுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆண்டுதோறும் பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் விபத்தில் பாதிக்கப்படும் கண் பாா்வை குறித்து பல விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தியும் மீண்டும் விபத்துகள் தொடா்கின்றன.
நிகழாண்டில் அனைத்து அரவிந்த் கண் மருத்துவமனைகளிலும் மொத்தம் 1,464-க்கும் மேற்பட்டோா் பட்டாசு வெடி விபத்தில் கண்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.
Advertisement
Advertisement
இதில், மதுரையில் மட்டும் 213 போ் பாதிக்கப்பட்டனா். குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தகுந்த முறையில் கண் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குழந்தைகளின் எதிா்காலத்தை கவனத்தில் கொண்டு, பெற்றோா்கள் அதிக கவனத்துடன் வெடி வெடித்து தீபாவளி கொண்டாடி, பாா்வையிழப்பைத் தடுக்க வேண்டும் என்றாா் அவா்.