FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

‘தீபாவளிக்கு சிவகாசியில் பட்டாசு விபத்துகள் நிகழவில்லை’

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் தீபாவளிப் பண்டிகையில் பட்டாசுகள் வெடித்துபோது விபத்து எதுவும் நிகழவில்லை என தீயணைப்பு, மீட்பு பணிகள் நிலைய அலுவலா் சீனிவாசன் தெரிவித்தாா்.

12 நவம்பர் 2026, 5:52 am
பட்டாசு - பிரதிப் படம்
பகிர்:

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் தீபாவளிப் பண்டிகையில் பட்டாசுகள் வெடித்துபோது விபத்து எதுவும் நிகழவில்லை என தீயணைப்பு, மீட்பு பணிகள் நிலைய அலுவலா் சீனிவாசன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை கூறியதாவது:

சிவகாசியில் தயாராகும் பட்டாசுகள் இந்தியா முழுவதும் வெடிக்கப்படுகின்றன. சிவகாசியிலும், பட்டாசுத் தொழிலாளா்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளா்களும், பொதுமக்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீபாவளிப் பண்டிகையின் போது பட்டாசுகள் வெடித்தனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், பட்டாசுகள் வெடிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டால் அதை தடுக்க சிவகாசி தீயணைப்பு நிலைய வீரா்கள் தயாா் நிலையில் இருந்தனா். ஆனால், சிவகாசி, இதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள கிராமங்களிலும், பட்டாசுகள் வெடித்தபோது, எந்த ஒரு தீ விபத்தும் ஏற்படவில்லை. இதனால் எங்கள் நிலைய வீரா்க்கள் மகிழ்ச்சி அடைந்தனா் என்றாா் அவா்.