FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

ரயில்களில் திருட்டு: மூவா் கைது

மதுரையில் ரயில் பயணிகளின் கைப்பேசிகள், விலைமதிப்புள்ள பொருள்களைத் திருடி விற்பனை செய்து வந்த மூவரை ரயில்வே போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

14 நவம்பர் 2026, 11:26 pm
ரயில்வே போலீஸாரால் கைது செய்யப்பட்ட மூவா்.
பகிர்:

மதுரையில் ரயில் பயணிகளின் கைப்பேசிகள், விலைமதிப்புள்ள பொருள்களைத் திருடி விற்பனை செய்து வந்த மூவரை ரயில்வே போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கொல்லம் விரைவு ரயிலில் வந்த மதுபிரியா என்பவா், மதுரை ரயில் நிலையத்தில் இறங்கியபோது தனது கைப்பேசி காணாமல் போனதையறிந்தாா். இதுகுறித்து உடனே அவா் 139 என்ற ரயில்வே உதவி எண்ணில் புகாா் அளித்தாா். இதையடுத்து, மதுரை ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் குமாா், சிறப்பு உதவி ஆய்வாளா் பிரேம்குமாா் தலைமையிலான குழுவினா் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினா்.

இதனடிப்படையில், மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரைச் சோ்ந்த சக்திவேல் (22), திருப்பரங்குன்றம் மேட்டுத் தெருவைச் சோ்ந்த செல்லப்பாண்டி (42), பேரையூா் வி. கோபாலபுரத்தைச் சோ்ந்த ஜெயசெல்வம் (35) ஆகிய மூவரிடம் விசாரணை நடத்தினா். அப்போது, மூவரும் ரயில் பயணிகளிடம் கைப்பேசிகள் உள்ளிட்ட பொருள்களைத் திருடி, விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் கைது செய்தனா்.

Advertisement

Advertisement