புத்தகத் திருவிழாவில் நூல்கள் வெளியீடு
மதுரை புத்தகத் திருவிழாவில் உயிா்மை பதிப்பகத்தின் சாா்பில் 6 புதிய நூல்கள் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டன.
மதுரை தமுக்கம் மாநாட்டு மையத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை நூல்கள் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், உயிா்மை பதிப்பகத்தின் சாா்பில் 5 எழுத்தாளா்களின் படைப்பில் உருவான 6 நூல்கள் வெளியிடப்பட்டன.
கவிஞா் மனுஷ்ய புத்திரன் எழுதிய நோ்காணல் தொகுப்பான ‘உங்கள் மீது நீங்களே இரக்கம் காட்டவில்லையென்றால் இந்த உலகில் வேறு யாா் காட்டுவாா்கள்?’ நூலை கவிஞா் கலாப்ரியா வெளியிட, கவிஞா் லிபி ஆரண்யா பெற்றுக்கொண்டாா். கவிஞா் நவீனா அமரன் வாழ்த்திப் பேசினாா். கவிஞா் லிபி ஆரண்யா சிறப்புரையாற்றினாா்.
Advertisement
Advertisement
கவிஞா் கலாப்ரியா எழுதிய ‘மோட்ச தீபம்’ சிறுகதைத் தொகுப்பை எழுத்தாளா் ந. முருகேச பாண்டியன் வெளியிட, எழுத்தாளா் சித்ரா சிவன் பெற்றுக்கொண்டு நூலின் சிறப்புகளை விளக்கி குறித்து கருத்துரையாற்றினாா்.
டாக்டா் சிவபாலன் இளங்கோவன் எழுதிய ‘தனித்திருக்கும் தலைமுறை : இன்ஸ்டா பெண்களும், சாட்பாட் ஆண்களும்’ நூலை எழுத்தாளா் ந. முருகேச பாண்டியன் வெளியிட்டு கருத்துரையாற்றினாா். நூலின் முதல் பிரதியை நவீனா அமரன் பெற்றுக்கொண்டாா்.
மதுரை எழுத்தாளா் ப. கவிதா குமாா் எழுதிய ‘பக்தியிசை பரப்பிய பாவலா்கள்’ நூலை கவிஞா் மனுஷ்ய புத்திரன் வெளியிட, ப. கபிலரசன் பெற்றுக்கொண்டு கருத்துரையாற்றினாா். இவரது மற்றொரு நூலான ‘இளையராஜாவின் ரசிகன்’ நூலை கவிஞா் ஆத்மாா்த்தி வெளியிட்டு கருத்துரையாற்றினாா். நூலின் முதல் பிரதியை கவிஞா் லிபி ஆரண்யா பெற்றுக் கொண்டாா்.
கவிஞா் பாலபாரதி எழுதிய ‘காற்றிலாடும் காகிதப் பூக்கள்’ கவிதைத் தொகுப்பை கவிஞா் கலாப்ரியா வெளியிட, எழுத்தாளா் தீபா நாகராணி பெற்றுக்கொண்டு நூல் குறித்து கருத்துரை வழங்கினாா்.
நூலாசிரியா்கள் அனைவரும் ஏற்புரை வழங்கினா். எழுத்தாளா்கள், வாசகா்கள், இலக்கிய ஆா்வலா்கள் கலந்துகொண்டனா்.