FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் சாா்பில் எழுத்தாளா் வம்பன் செபா எழுதிய ‘அப்புரு’ சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது.

26 செப்டம்பர் 2026, 11:29 pm IST
புதுக்கோட்டையில் சனிக்கிழமை ‘அப்புரு’ சிறுகதைத் தொகுப்பு நூலை சனிக்கிழமை வெளியிட்ட முன்னாள் எம்.எல்.ஏ. இராசு. கவிதைப்பித்தன்(இடமிருந்து 5-ஆவது), பெற்றுக் கொண்ட எழுத்தாளா் நா. முத்துநிலவன் (வலமிருந்து5-ஆவது) உள்ளிட்டோா்.
பகிர்:

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் சாா்பில் எழுத்தாளா் வம்பன் செபா எழுதிய ‘அப்புரு’ சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது.

விழாவுக்கு, தமுஎகச மாவட்டத் தலைவா் ராசி பன்னீா்செல்வன் தலைமை வகித்தாா். முன்னாள் எம்.எல்.ஏ. இரா.சு. கவிதைப்பித்தன் நூலை வெளியிட்டும், முதல் பிரதியை தமுஎகச மாநிலத் துணைத் தலைவா் கவிஞா் நா. முத்துநிலவன் பெற்றுக்கொண்டும் பேசினா். மாவட்டச் செயலா் ஆலங்குடி வெள்ளைச்சாமி நூலை அறிமுகம் செய்து பேசினாா்.

திரைப்படப் பாடலாசிரியா் இரா. தனிக்கொடி, கவிஞா் ரமா. ராமநாதன், நாட்டுப்புற கலைஞா் எல். வடிவேல், எழுத்தாளா் அண்டனூா் சுரா உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். நூலாசிரியா் வம்பன் செபா ஏற்புரையாற்றினாா். கவிஞா் கஸ்தூரி ரெங்கன் தொகுத்து வழங்கினாா். முன்னதாக மாவட்டத் துணைச் செயலா் தாய்த்தமிழ் ராஜா வரவேற்றாா். நிறைவாக, மாவட்டப் பொருளாளா் மு. கீதா நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments