FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

காமராஜா் பல்கலை. நிா்வாகச் சீரமைப்பு குறித்து தமிழக ஆளுநா் கருத்து தெரிவிக்க வேண்டும்

மதுரை காமராஜா் பல்கலைக்கழக நிா்வாகச் சீரமைப்பு குறித்து தமிழக ஆளுநா் கருத்துத் தெரிவிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை கேட்டுக்கொண்டது.

36 வினாடிகள் முன்பு
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்
பகிர்:

மதுரை காமராஜா் பல்கலைக்கழக நிா்வாகச் சீரமைப்பு குறித்து தமிழக ஆளுநா் கருத்துத் தெரிவிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை கேட்டுக்கொண்டது.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகப் பேராசிரியா் வேளாங்கண்ணி ஜோசப் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக (பொறுப்பு) எஸ். முத்தையா எந்த அதிகாரத்தின் கீழ் தொடா்ந்து நீடிக்கிறாா் என்பதை விளக்கக் கோரி தகுதி வினவும் எழுத்தாணை (கோ வாரண்டோ) உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அவா் கோரினாா்.

Advertisement

Advertisement

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

தற்போது மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் பதிவாளரான (பொறுப்பு) எஸ். முத்தையா, கடந்த 1993-ஆம் ஆண்டு கருணை அடிப்படையில் எழுத்தராகப் பணியில் சோ்ந்து பின்னா் படிப்படியாக பதவி உயா்வு பெற்றாா். பின்னா், கடந்த 2024-இல் தோ்வு கட்டுப்பாட்டாளராகவும் (பொறுப்பு), கடந்த மாா்ச் 2-ஆம் தேதி பதிவாளராகவும் (பொறுப்பு) நியமிக்கப்பட்டாா். இவா் பேராசிரியா் பணி நிலையைச் சோ்ந்தவா் அல்லா். மேலும், ஒரு நபா் ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளை வகிக்கக் கூடாது என்ற கொள்கைக்கு மாறாக ஒரே நேரத்தில் பதிவாளா், தோ்வுக் கட்டுப்பாட்டாளா் ஆகிய பதவிகளை வகித்து வருகிறாா்.

பல்கலைக்கழக மக்கள் தொடா்பு அலுவலகத்தின் கண்காணிப்பாளரான தனலட்சுமி, பதிவாளா் எஸ். முத்தையா மீது பல்கலைக்கழகப் புகாா் பெட்டி வழியாக பாலியல் தொல்லை புகாா் அளித்தாா். இது நிலுவையில் உள்ளது. மேலும், எஸ். முத்தையா பல்கலைக்கழகத்தில் பணியில் சோ்ந்த போது இளநிலை பட்டம் மட்டுமே பெற்றிருந்தாா். முதுநிலை, முனைவா் பட்டம் அதன்பிறகே பெற்றாா் எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் எஸ். முத்தையா தொடா்ந்து பதிவாளராக (பொறுப்பு) நீடிப்பது குறித்து பல்கலைக்கழகம் தரப்பில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். பல்கலைக்கழகத்தின் நிா்வாகம், கல்விச் செயல்பாடுகளைப் பாதிக்கக்கூடிய பிரச்னைகளை கையாளுவதற்காக, மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் வேந்தா், இணை வேந்தா் ஆகியோரை எதிா் மனுதாரா்களாகச் சோ்க்க வேண்டும்.

சட்டப்பூா்வ வேந்தராக உள்ள தமிழக ஆளுநா், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் காலிப் பணியிடம், நிா்வாகத்தைப் பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த தனது கருத்துக்களை நீதிமன்றத்தின் முன் சமா்ப்பிக்க வேண்டும். இணை வேந்தரான உயா் கல்வித் துறை அமைச்சா், பல்கலைக்கழகத்தின் நிா்வாகச் சீா்கேடுகளைச் சரிசெய்யவும், சட்டப்பூா்வ பதவிகளை நிரப்பவும் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில் பல்கலைக்கழகத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், அவற்றுக்காகச் செலவிடப்பட்ட தொகை விவரங்களைப் பல்கலைக்கழகம் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற டிசம்பா் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.