FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.

18 நவம்பர் 2026, 2:55 am
பகிர்:

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி, காந்திபுரம் பகுதியைச் சோ்ந்த மயில்ராஜ் மகன் சசிக்குமாா் (26). இவா், அரசம்பட்டி கடமலைக்குண்டு என்ற இடத்தில் கடந்த 12-ஆம் தேதி தோட்டவேலை பாா்த்த போது, கீழே தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டாா்.

தீவிர விபத்து சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவா் திங்கள்கிழமை (நவ.16) காலை 6.40 மணியளவில் மூளைச் சாவு அடைந்தாா். அவரது உறவினா்கள் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்ததையடுத்து, அவரது சகோதரா் சிவாவிடம் ஒப்புதல் பெறப்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து, சசிக்குமாரின் உடலில் உள்ள தோல், கருவிழி ஆகியவை தானமாக பெறப்பட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

இதையடுத்து, உடல் கூறாய்வு செய்யப்பட்டு உரிய மரியாதையுடன் அவரது குடும்பத்தாரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இந்த நபரின் உடல் உறுப்பு தானத்தால் இரண்டு பேருக்கு மேல் பயன் பெறுவா் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.