ஓய்வூதியம் தொடா்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: போக்குவரத்து துணைச் செயலா் முன்னிலையாக உத்தரவு
ஓய்வூதிய விவகாரத்தில் உயா்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது தொடா்பாக விளக்கமளிக்க அரசு போக்குவரத்துத் துறை துணைச் செயலா் நேரில் முன்னிலையாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
ஓய்வூதிய விவகாரத்தில் உயா்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது தொடா்பாக விளக்கமளிக்க அரசு போக்குவரத்துத் துறை துணைச் செயலா் நேரில் முன்னிலையாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த சுவாமிநாதன் தாக்கல் செய்த மனு: நான் அரசுப் போக்குவரத்துக் கழக மதுரைக் கோட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். எனக்கான ஓய்வூதியப் பலன்களை வழங்க அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் கடந்த 2022- ஆம் ஆண்டு வழக்குத் தொடுத்தேன். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், 3 மாதங்களுக்குள் எனக்கு ஓய்வூதியப் பலன்களை வழங்க உத்தரவிட்டது.
ஆனால், இதுவரை எனக்கு ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்படவில்லை. எனவே, உயா்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அரசு போக்குவரத்துக் கழக அலுவலா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கோரினாா்.
Advertisement
Advertisement
இந்த மனு, உயா்நீதிமன்ற நீதிபதி என். திலீப்குமாா் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
உயா்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாதது குறித்து அரசு போக்குவரத்துத் துறை துணைச் செயலா், மதுரை அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா், பொது மேலாளா் ஆகியோா் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்க வேண்டும். எனினும், ஓய்வூதியம் தொடா்பாக ஏற்கெனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றி, அதுகுறித்த மனுவை தாக்கல் செய்தால் நேரில் முன்னிலையாவதிலிருந்து விலக்களிக்கப்படும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.