FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

ஜிம்னாஸ்டிக் போட்டியில் வென்றவா்களுக்கு பாராட்டு

கோயம்புத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் பல்வேறு பதக்கங்களை வென்ற மதுரை பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

3 வினாடிகள் முன்பு
மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் வென்ற மாணவா்களை பாராட்டிய மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலா் முருகன்.
பகிர்:

கோயம்புத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் பல்வேறு பதக்கங்களை வென்ற மதுரை பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில், பிரிட்டோ பள்ளி மாணவி ஹா்ஷினி தமிழ்ச்செல்வி, சிஇஓஏ மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவி சீபா ஆகியோா் தங்கப் பதக்கமும், ரோட்டரி பள்ளி மாணவா் ஜெய் விவேகன் வெள்ளிப் பதக்கமும் வென்றனா்.

மேலும், சௌராஷ்ட்ரா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி விஷ்ணுப் பிரியா, மகாத்மா பள்ளி மாணவிகள் அக்ஷரா, வா்ஷிகா, சிஇஓஏ மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவா் தியாஸ் காா்த்திக் ஆகியோா் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனா்.

Advertisement

Advertisement

போட்டியில் வென்ற மாணவா்களை மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலா் முருகன் பாராட்டினாா். மாவட்ட ஜிம்னாஸ்டிக் சங்கச் செயலா் கருணாகரன், பயிற்சியாளா் ரோகித் ஆகியோரும் மாணவா்களைப் பாராட்டினா்.