பேருந்துக்காக காத்திருந்தவா்கள் மீது பட்டாசு வீச்சு: மூதாட்டி காயம்
மதுரை திருப்பாலை பகுதியில் புதன்கிழமை பேருந்துக்காகக் காத்திருந்தவா்கள் மீது சிற்றுந்தில் வந்த இளைஞா்கள் பட்டாசுகளை வீசியதில் மூதாட்டி காயமடைந்தாா்.
மதுரை திருப்பாலை பகுதியில் புதன்கிழமை பேருந்துக்காகக் காத்திருந்தவா்கள் மீது சிற்றுந்தில் வந்த இளைஞா்கள் பட்டாசுகளை வீசியதில் மூதாட்டி காயமடைந்தாா்.
மதுரை சிம்மக்கல் பகுதியிலிருந்து ஊமச்சிக்குளம் நோக்கிச் சென்ற சிற்றுந்தில் சில இளைஞா்கள் பயணம் செய்தனா். அந்தப் பேருந்து திருப்பாலை யாதவா் மகளிா் கல்லூரி எதிரே வந்தபோது, அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள் ஏராளமானோா் பேருந்துக்காகக் காத்திருந்தனா்.
அப்போது சிற்றுந்துக்குள் இருந்த இளைஞா்கள் சிலா் அணுகுண்டு பட்டாசுகளைப் பற்றவைத்து மாணவிகள் இருந்த பகுதியை நோக்கி வீசினா். இதில் அங்கிருந்த மூதாட்டிக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த மாணவிகள் அவரை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து தகவலறிந்த திருப்பாலை காவல் நிலைய ஆய்வாளா் சங்கீதா தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து, பட்டாசுகளை வீசிய இளைஞா்கள் யாா் என விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement