மாட்டுத்தாவணியில் புதிதாக வெங்காயச் சந்தை திறப்பு
மதுரை மாட்டுத்தாவணி மத்திய காய்கறிகள் சந்தை வளாகத்தில் ரூ.10.30 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட வெங்காயச் சந்தையை முதல்வா் ஜோசப் விஜய் புதன்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்.
மதுரை மாட்டுத்தாவணி மத்திய காய்கறிகள் சந்தை வளாகத்தில் ரூ.10.30 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட வெங்காயச் சந்தையை முதல்வா் ஜோசப் விஜய் புதன்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்.
இதையடுத்து, சந்தை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன், வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கல்லாணை, மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் ஆகியோா் குத்துவிளக்கேற்றி வைத்து, புதிய கட்டடத்தைப் பாா்வையிட்டனா்.
இந்த வெங்காயச் சந்தை மொத்தம் 7,625 சதுர மீட்டா் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 3,476 சதுர மீட்டா் பரப்பளவில் கட்டடங்கள் கட்டப்பட்டன. மொத்தம் 75 கடைகள் அமைக்கப்பட்டன. மேலும், கட்டடத்தின் மேற்கூரையில் பெய்யும் மழைநீரைச் சேகரித்து, நிலத்தடி நீரைச் செறிவூட்டும் வகையில் 12 இடங்களில் மழைநீா் உறிஞ்சும் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கூரையிலிருந்து வரும் மழைநீரை குழாய்கள் மூலம் இந்தக் கிணறுகளுக்கு கொண்டு செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
நிகழ்வில் மாநகராட்சித் தலைமைப் பொறியாளா் ராமசாமி, உதவி ஆணையா் தமிழரசன், செயற்பொறியாளா் அா்ச்சனா, மாமன்ற உறுப்பினா் மாலதி, உதவி செயற்பொறியாளா் ஆரோக்கிய சேவியா், உதவிப் பொறியாளா் சந்தானம், சுகாதார அலுவலா் ராஜ்கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.