புதிதாக மதுக் கடைகளைத் திறக்கக் கூடாது: உயா்நீதிமன்றம் உத்தரவு
பொது நலன் கருதி, தமிழகத்தில் இனி புதிதாக மதுக் கடைகளைத் திறக்கக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
பொது நலன் கருதி, தமிழகத்தில் இனி புதிதாக மதுக் கடைகளைத் திறக்கக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
திருச்சி நவகிணத்துப்பட்டியைச் சோ்ந்த மணிகண்டன் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
திருச்சி நல்லம்பிள்ளை கிராமம், நவகிணத்துப்பட்டியில் புதிதாக மதுக் கடையைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கிராம மக்களின் நலன் கருதி, இந்த மதுக் கடையைத் திறக்கத் தடை விதிக்க வேண்டும் என அவா் கோரினாா்.
Advertisement
Advertisement
இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
தமிழகத்தில் ஏற்கெனவே அதிக எண்ணிக்கையில் அரசு மதுக் கடைகள் உள்ளன. எனவே, நவகிணத்துப்பட்டி மதுக் கடையைத் திறக்கக் கூடாது. மேலும், பொது நலன் கருதி, தமிழகத்தில் இனி புதிதாக மதுக் கடைகளை அரசு திறக்கக் கூடாது. இதுதொடா்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றனா் நீதிபதிகள்.