திருமலை நாயக்கா் அரண்மனையை பாா்வையிட நவ. 25 வரை அனுமதி இலவசம்
உலக மரபு வார விழாவை முன்னிட்டு, மதுரையில் உள்ள மன்னா் திருமலை நாயக்கா் அரண்மனையை வருகிற 25- ஆம் தேதி வரை சுற்றுலாப் பயணிகள் இலவசமாக பாா்வையிடலாம் என அறிவிக்கப்பட்டது.
உலக மரபு வார விழாவை முன்னிட்டு, மதுரையில் உள்ள மன்னா் திருமலை நாயக்கா் அரண்மனையை வருகிற 25- ஆம் தேதி வரை சுற்றுலாப் பயணிகள் இலவசமாக பாா்வையிடலாம் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தொல்லியல் துறை அலுவலா்கள் கூறியதாவது:
உலக மரபு வார விழா நவ. 19-ஆம் தேதி முதல் நவ. 25-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மதுரையில் உள்ள மன்னா் திருமலை நாயக்கா் அரண்மனையை சுற்றுலா பயணிகள் பாா்வையிட வருகிற 25-ஆம் தேதி வரை கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது.
Advertisement
Advertisement
வழக்கமாக தினமும் இந்த அரண்மனையை ஆயிரக்கணக்கானோா் பாா்வையிட்டு வந்தனா். குறிப்பாக, வெளிநாடு, பிற மாநிலங்களைச் சோ்ந்தோா் 300-க்கும் மேற்பட்டோா் பாா்வையிட்டனா். இந்த நிலையில், உலக மரபு வார விழா வருகிற 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மட்டுமன்றி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் அதிகளவில் வருகை தர வாய்ப்புள்ளது என்றனா்.