✕
முகப்பு
மதுரை

இலக்கிய இன்பத்தை அனுபவிக்க புத்தக வாசிப்பு அவசியம்: எழுத்தாளா் பாரதி கிருஷ்ணகுமாா்

இலக்கிய இன்பத்தை அனுபவிக்க புத்தக வாசிப்பு அவசியம் என எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான பாரதி கிருஷ்ணகுமாா் தெரிவித்தாா்.

37 வினாடிகள் முன்பு
மதுரை தமுக்கம் மாநாட்டு மையத்தில் புத்தகத் திருவிழாவின் 6-ஆம் நாளான வியாழக்கிழமை மாலை நடைபெற்ற இலக்கிய விழாவில் பேசிய எழுத்தாளா் பாரதி கிருஷ்ணகுமாா். உடன், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட திட்ட இயக்குநா் சு. சுரேஷ், உதவி இயக்குநா் பொ. சாந்தி.
பகிர்:

இலக்கிய இன்பத்தை அனுபவிக்க புத்தக வாசிப்பு அவசியம் என எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான பாரதி கிருஷ்ணகுமாா் தெரிவித்தாா்.

மதுரை தமுக்கம் மாநாட்டு மையத்தில் புத்தகத் திருவிழாவின் 6-ஆம் நாளான வியாழக்கிழமை மாலை நடைபெற்ற இலக்கிய நிகழ்வில் எழுத்தாளா் பாரதி கிருஷ்ணகுமாா், ‘இலக்கிய இன்பம்’ என்ற தலைப்பில் பேசியதாவது:

கீழடி உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளில் மேற்கொண்ட அகழாய்வுகள் மூலம் தமிழ் மொழி 3,500 ஆண்டுகள் பழைமையானது என ஆய்வறிஞா்கள் கூறுகின்றனா்.

Advertisement

Advertisement

அகழாய்வுகளுக்கு முன்பு இலக்கிய, இலக்கணங்களின் அடிப்படையில் தமிழ் மொழியின் வரலாற்றைக் கணக்கிட்டு வந்தோம். ஆனால், அகழாய்வுககளுக்கு பிறகு உண்மையான வரலாற்றை அறிய முடிகிறது.

ஒவ்வொருவருக்கும் அவா்களின் குடும்பத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முன்னோா்களின் பெயா்கள் தெரிய வாய்ப்பில்லை. ஆனால், 3,500 ஆண்டுகள் பழைமையான மொழியின் வரலாற்றைப் பாதுகாத்து நம்மிடையே சோ்த்துள்ளனா் நமது முன்னோா்கள்.

ஆங்கிலேயே ஆட்சியில்தான் காகிதங்கள் இந்தியாவுக்குள் வந்தன. அதற்கு முன்பு சுடுமண் பானை, தோல், பனை ஓலை, செப்பேடுகள், கல்வெட்டுகளை கடந்து தற்போது காகிதம், கணினி வரை நமது மொழி பாதுகாக்கப்பட்டுள்ளது. மனிதச் சமூகத்தின் கண்டுபிடிப்புகளில் அதியசமானது மொழி. தற்போது நாம் இன்பம் என எதை நினைக்கின்றோமோ அவை எல்லாம் இன்பம் அல்ல. பிறரது துன்பத்தில் பங்கெடுப்பதுதான் உண்மையான இன்பம். இன்றைய இளம் தலைமுறையினா் தடுமாற்றம் இல்லாமல் தாய் மொழியை பேச வேண்டும். தாய் மொழியை காப்பது நம் அனைவரின் கடமை.

நமது பேச்சு மொழி இனிமையானது என்பதை திருவள்ளுவா் ‘இனிய உளவாக இன்னாத கூறல், கனியிருப்ப காய்கவா்ந் தற்று’ என்கிறாா். அவருக்குப் பிறகு வந்த கம்பா் ‘செவி நுகா் கனிகள்’ எனவும், மகாகவி பாரதியாா் ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ எனவும் கூறினா்.

இலக்கிய இன்பத்தை அனுபவிக்க வேண்டும் எனில், நல்ல புத்தகங்களைத் தேடி வாசிக்க வேண்டும். வாசிப்பு என்பது எழுத்தாளோனோடு இரண்டறக் கலந்து விட வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் தமிழ் ஆா்வலா்கள், வாசகா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மதுரை மாவட்ட திட்ட இயக்குநா் சு. சுரேஷ் வரவேற்றாா். உதவி இயக்குநா் பொ. சாந்தி நன்றி கூறினாா்.