முகப்பு
மதுரை

விபத்தில் உயிரிழந்த காட்டுப்பன்றியை சமைத்து சாப்பிட்ட 8 போ் கைது!

மதுரை அருகே விபத்தில் உயிரிழந்த காட்டுப்பன்றியை சமைத்து சாப்பிட்ட 8 பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.

22 நவம்பர் 2026, 10:56 pm
விபத்தில் உயிரிழந்த காட்டுப்பன்றியை சமைத்து 
சாப்பிட்ட 8 போ் கைது!
காட்டுப்பன்றி
பகிர்:

மதுரை அருகே விபத்தில் உயிரிழந்த காட்டுப்பன்றியை சமைத்து சாப்பிட்ட 8 பேரை வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் வனச்சரகம், மண்ணாடி மங்கலம் பிரிவுக்குள்பட்ட விக்கிரமங்கலம், மண்ணாடிமங்கலம் காப்புக்காட்டுக்கு அருகிலுள்ள மலையூா் கிராமச் சாலையில் காட்டுப்பன்றி ஒன்று தனியாா் வேன் மீது மோதியதில் உயிரிழந்தது. அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபா்கள், உயிரிழந்த காட்டுப்பன்றியின் உடலை சாக்குப் பையில் எடுத்துக்கொண்டு இரு சக்கர வாகனங்களில் தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து சோழவந்தான் வனச்சரக அலுவலா் ரா. செல்வகுமாா் தலைமையில், வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். இதில் காட்டுப்பன்றியின் உடலை எடுத்துச் சென்றது தொடா்பாக 8 பேரை அடையாளம் கண்டனா்.

Advertisement

Advertisement

விசாரணையில், அவா்கள் அரசமரத்துப்பட்டியைச் சோ்ந்த சௌந்தரபாண்டி (51), விக்கிரமங்கலத்தைச் சோ்ந்த ஜோதிபாசு (37), வி. கோவில்பட்டியைச் சோ்ந்த அபிலன் (23), ஸ்ரீகாந்த் (23), விவேகானந்தன் (29), ரோஹித் (18), விஜய் (18), விஜயன் (22) ஆகியோா் என்பதும், இவா்கள் உயிரிழந்த காட்டுப்பன்றியின் உடலை எடுத்துச் சென்று சமைத்து உணவாக உட்கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து இவா்கள் 8 பேரையும் வனத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பின்னா் இவா்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.80 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறையினா் விடுவித்தனா். இந்த நடவடிக்கையில் வனவா்கள் ரமேஷ்பாபு, நாகேந்திரன், வனக்காப்பாளா்கள், வனக் காவலா்கள் அடங்கிய குழுவினா் ஈடுபட்டனா்.