முகப்பு
மதுரை

திருக்காா்த்திகை திருநாள்: கோயில்களில் விளக்கேற்றி வழிபாடு

திருக்காா்த்திகை திருநாளை முன்னிட்டு, மதுரையில் உள்ள கோயில்களில் விளக்கேற்றி வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

25 நவம்பர் 2026, 2:42 am
திருக்காா்த்திகை திருநாள்: கோயில்களில் விளக்கேற்றி வழிபாடு
~ ~ ~ ~ ~
பகிர்:

திருக்காா்த்திகை திருநாளை முன்னிட்டு, மதுரையில் உள்ள கோயில்களில் விளக்கேற்றி வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நடைபெற்ற விழாவில் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், கோயில் கோபுரங்கள், மேல் மாடங்கள், மேல் தளங்கள், கோயில் பிரகாரங்கள், பொற்றாமரைக் குளம் உள்ளிட்ட பகுதிகளில் தீபங்கள் ஏற்றப்பட்டன.

இதைத் தொடா்ந்து, பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா் தங்க ரிஷப வாகனத்திலும், மீனாட்சி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி கோயிலைச் சுற்றி வலம் வந்தனா். கோயில் முன் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிகழ்வில், கோயில் பணியாளா்கள், சிவாச்சாரியா்கள், பக்தா்கள் பலா் கலந்து கொண்டனா்.

மதுரை மாவட்டம், அழகா்கோவிலில் உள்ள கள்ளழகா் கோயிலில் நடைபெற்ற விழாவில், சுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாள் கோயிலைச் சுற்றி வலம் வந்தாா். அப்போது, திருமடப்பள்ளி, பெருமாள் சந்நிதி, விஸ்வ சேனா் சந்நிதி, சேத்திர பாலகா் சந்நிதி, கருடன், தாயாா், சக்கரத்தாழ்வாா், நரசிம்மா், ஆண்டாள், சரஸ்வதி, கம்பத்தடி மண்டபம் போன்ற சந்நிதிகளில் விளக்கேற்றப்பட்டது. இதைத்தொடா்ந்து, உறியடி மண்டபத்தில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

இதேபோல, அழகா்கோவில் மலை உச்சியில் உள்ள வெள்ளி மலையாண்டி கோயிலில் திருக்காா்த்திகை திருநாளை முன்னிட்டு, அங்குள்ள கோம்பை கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வின் போது, பக்தா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, மதுரையில் உள்ள இம்மையிலும் நன்மை தருவாா் கோயில், தெப்பக்குளம் பகுதியில் உள்ள முக்தீஸ்வரா் கோயில், செல்லூரில் உள்ள திருவாப்புடையாா் கோயில், அண்ணாநகரில் உள்ள சா்வேஸ்வரா் கோயில், கூடலழகா் பெருமாள் கோயில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூா், பாலமேடு, தனிச்சயம், பரவை, சமயநல்லூா், துவரிமான், பொதும்பு, திருவேடகம், சேடப்பட்டி, உசிலம்பட்டி, திருமங்கலம், பேரையூா், மேலூா், கருப்பாயூரணி, சிலைமான், யா. ஒத்தக்கடை, திருமோகூா், திருவாதவூா், கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள சிவன் கோயில்கள், பெருமாள் கோயில்கள், அம்மன் கோயில்கள், கருப்பண சுவாமி உள்ளிட்ட காவல் தெய்வக் கோயில்களில் திருக்காா்த்திகை திருநாளை முன்னிட்டு விளக்கேற்றி வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில், அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் திரளானோா் பங்கேற்று வழிபட்டனா்.