திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தூணைச் சுற்றி தடுப்புகள் அமைத்து போலீஸ் பாதுகாப்பு!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தூணைச் சுற்றி தடுப்புகள் அமைத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதைப் பற்றி...

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தூணைச் சுற்றி தடுப்புகள் அமைத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகைத் திருநாளான இன்று (நவ. 24) ஒரு நாள் மட்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள கல்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி, தமிழக அரசு சார்பில் இணையவழியில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
ஒரு வழக்கில் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்த அதே நீதிபதிகள் அமர்வில்தான் மறு ஆய்வு மனுவும் விசாரிக்கப்படுவது உச்சநீதிமன்ற மரபு என்ற நிலையில், நீதிபதிகள் அரவிந்த்குமார், விபுல் எம். பஞ்சோலி அமர்வு திங்கள்கிழமை பணிப் பட்டியலில் இல்லை.
இதனால், தமிழக அரசின் மறு ஆய்வு மனு விசாரணைக்கு வரவில்லை. குருநானக் பிறந்த நாளையொட்டி இன்று (நவ. 24) உச்சநீதிமன்றத்துக்கு விடுமுறை என்பதால், அரசின் மறுஆய்வு மனு செவ்வாய்க்கிழமையும் விசாரணைக்கு வர வாய்ப்பில்லை எனத் தெரியவந்துள்ளது.
தீப விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து எந்தத் தகவலையும் அரசு வெளியிடாததால், செவ்வாய்க்கிழமை கார்த்திகை தீபம் திருப்பரங்குன்றம் மலை தூணில் ஏற்றப்படுமா அல்லது முந்தைய கால நடைமுறைகளே பின்பற்றப்படுமா என்பதில் குழப்பம் நீடிக்கிறது.
இதனிடையே, மதுரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 12 காவல் கண்காணிப்பாளர்கள், 8 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 5,000-க்கும் அதிகமான போலீஸார் திருப்பரங்குன்றத்தில் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம் நகர், கிரிவலப் பாதை பகுதிகள் முழுமையும் திங்கள்கிழமை காவல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாஜக உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் கோரிக்கை வைக்கும் திருப்பரங்குன்றம் மலை உச்சி உள்ள தீபத் தூணைச் சுற்றி தடுப்புகள் வைத்து தடுக்கப்பட்டுள்ளன.
மலை உச்சியில் தூண் அமைந்துள்ள பகுதியில் ஒரு காவல் கண்காணிப்பாளர், 2 உதவி ஆணையர்கள் தலைமையில் 187 போலீஸாரும், சிக்கந்தர் தர்கா பகுதியில் ஒரு எஸ்பி தலைமையில் ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 190 போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Barriers have been set up around the pillar at the summit of Tirupparankundram hill, and police security has been deployed.