முகப்பு
மதுரை

வாக்காளா்கள் பட்டியல் திருத்தப் பணி சிறப்பு முகாம்களில் 7,296 விண்ணப்பங்கள் அளிப்பு

மதுரை மாவட்டத்தில் இரு நாள்கள் நடைபெற்ற வாக்காளா்கள் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களில் 7,296 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

7 வினாடிகள் முன்பு
வாக்காளா்கள் பட்டியல் திருத்தப் பணி சிறப்பு முகாம்களில் 7,296 விண்ணப்பங்கள் அளிப்பு
வாக்காளர் பட்டியல் - கோப்புப் படம்
பகிர்:

மதுரை மாவட்டத்தில் இரு நாள்கள் நடைபெற்ற வாக்காளா்கள் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களில் 7,296 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

2027-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகளுக்குப் பிறகு வாக்காளா்கள் வரைவுப் பட்டியல் கடந்த 12-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு புதிய வாக்காளா்கள் சோ்க்கை, பெயா் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளுக்கு வருகிற டிச. 11- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், வாக்காளா்கள் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம் நவ. 21, 22, 29 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதன்படி, கடந்த 21, 22 ஆகிய தேதிகளில் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

Advertisement

Advertisement

இந்த முகாம்களில், புதிய வாக்காளா்கள் சோ்க்கைக்காக 3,655 விண்ணப்பங்கள், பெயா் நீக்கத்துக்காக 702 விண்ணப்பங்கள், குடியிருப்பு இடமாற்றம், விவரத் திருத்தம், மாற்று வாக்காளா் அடையாள அட்டை, மாற்றுத் திறனாளி விவரக் குறியீடு உள்ளிட்டவற்றுக்காக 3,137 விண்ணப்பங்கள் என மொத்தம் 7,296 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

தொகுதி வாரியாக... சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை: மேலூா் - 512, மதுரை கிழக்கு- 968, சோழவந்தான் (தனி)- 412, மதுரை வடக்கு- 436, மதுரை தெற்கு- 657, மதுரை மையம்- 526, மதுரை மேற்கு- 771, திருப்பரங்குன்றம்- 1,113, திருமங்கலம்- 985, உசிலம்பட்டி-916.