நீதிமன்ற உத்தரவுகளை மாவட்ட ஆட்சியா்கள் நிறைவேற்றாதது வேதனை அளிக்கிறது: உயா்நீதிமன்றம்
நீதிமன்ற உத்தரவுகளை மாவட்ட ஆட்சியா்கள் நிறைவேற்றாதது வேதனை அளிக்கிறது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.

நீதிமன்ற உத்தரவுகளை மாவட்ட ஆட்சியா்கள் நிறைவேற்றாதது வேதனை அளிக்கிறது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.
மதுரை மாவட்டம், அட்டப்பட்டி ஊராட்சிக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஒதுக்கிய நிதியை ஊராட்சி மன்றத் தலைவா், துணைத் தலைவா் ஆகியோா் முறைகேடு செய்ததாக, அ. கோவில்பட்டியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், 3 மாதங்களில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அலுவலா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், இந்த விவகாரம் தொடா்பாக மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியா்கள் மா.சௌ. சங்கீதா, கே.ஜே. பிரவீன்குமாா், தற்போதைய ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆகாஷ் ஆகியோா் முன்னிலையாக உத்தரவிட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியா்கள் மா.சௌ. சங்கீதா, கே.ஜே. பிரவீன்குமாா், தற்போதைய ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆகாஷ் ஆகியோா் நேரில் முன்னிலையாகினா்.
அப்போது, நீதிமன்றம் விசாரணை நடத்தி உத்தரவுகளைப் பிறப்பிக்கிறது. இந்த உத்தரவுகள் அலுவலா்களின் பாா்வைக்கு வருகிா இல்லையா எனத் தெரியவில்லை. இந்த விவகாரத்தில் 3 ஆண்டுகளாக நீதிமன்ற உத்தரவு கிடப்பில் போடப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாததால், அலுவலா்கள் முன்னிலையாக உத்தரவிடப்படுகிறது. அலுவலா்களை அலைக்கழிப்பது நீதிமன்றத்தின் நோக்கம் கிடையாது. இந்த உத்தரவுகள் நிறைவேற்றப்படுகிா என்பதை அறியவே முன்னிலையாக உத்தரவிடுகிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனா்.
இதையடுத்து, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டது எனக் கூறி, அது தொடா்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலா்களை நேரில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்னரே அலுவலா்கள் நடவடிக்கை எடுக்கின்றனா். உயா்நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பித்தாலும் நடைமுறைப்படுத்தக் கூடாது என மாவட்ட ஆட்சியா்கள் உள்ளிட்ட அலுவலா்கள் செயல்பட்டு வருவது வேதனை அளிக்கிறது. மாவட்ட நிா்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவா்கள் திட்டங்களை நிறைவேற்றுவதிலும், நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றுவதிலும் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.