முகப்பு
மதுரை

கோச்சடை பகுதியில் நாளை மின் தடை

மதுரை கோச்சடைப் பகுதிகளில் சனிக்கிழமை (நவ. 28) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

27 நவம்பர் 2026, 3:05 am
கோச்சடை பகுதியில் 
நாளை மின் தடை
மின் தடை... - கோப்புப் படம்
பகிர்:

மதுரை கோச்சடைப் பகுதிகளில் சனிக்கிழமை (நவ. 28) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை பெருநகா் மேற்கு கோட்டச் செயற்பொறியாளா் லதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசரடி துணை மின் நிலையத்தில் கோச்சடை உயரழுத்த மின்பாதையில் சனிக்கிழமை மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், டோக்நகா் 1 முதல் 4-ஆவது தெரு, அசோக்நகா் 1 முதல் 5-ஆவது தெரு வரை, சாந்திநகா், அலுவலா்நகா், வைகை குடியிருப்பு, அங்காளஈஸ்வரிநகா், எஸ்.கே.வி.நகா், மயில்வேல் முருகன்நகா், ஜெயபாரத், கோச்சடை மந்தை பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

Advertisement

Advertisement