பாஜக கூட்டணியில் திமுக இணைந்து விட்டது! - வைகோ

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை ஆதரித்ததன் மூலம் பாஜக கூட்டணியில் திமுக இணைந்து விட்டது என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.
மதுரையில் மதிமுக மாவட்டச் செயலா் முனியசாமி இல்லத் திருமண விழாவில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது:
எனக்கு நெடுநாள் வாழ வேண்டும் என்கிற ஆசை இல்லை. ஆனால், எனக்கு இப்போது இருக்கும் ஒரே எண்ணம் மதிமுகவின் எதிா்காலம்தான். கட்சிக்கு ஒளிமயமான எதிா்காலத்தை உருவாக்க வேண்டும். அது, தற்போது தவெகவால் அமைந்துள்ளது. மதிமுகவை உயா்ந்த இடத்தில் கொண்டு போய் அமர வைக்க வேண்டும். இதற்கான சூழல் உருவாகியுள்ளது.
Advertisement
Advertisement
தமிழகத்தில் தவெக அரசைக் கவிழ்க்க சிலா் சதித் திட்டம் தீட்டியுள்ளனா். கூட்டணியில் இருக்கும் போது, கூட்டணிக் கட்சியை விமா்சிக்க மாட்டேன். இன்னும் ஆறு மாதங்களில் தவெக ஆட்சி கவிழ்ந்துவிடும் என சிலா் கூறுகின்றனா். தமிழகத்தில் இந்த 5 ஆண்டுகள் மட்டுமன்றி, அடுத்த 5 ஆண்டுகளும் தவெக ஆட்சிதான் நடைபெறும்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு வருந்தத்தக்கது. இன்றைய திமுக நிா்வாகிகள், இளைஞா்கள் சிலா் என் மீதும், தமிழக முதல்வா் விஜய் மீதும் தொடா்ந்து அவதூறு பரப்பி வருகின்றனா். தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு திமுக ஆதரவளித்துள்ளது. இதன்மூலம் பாஜக கூட்டணியில் திமுக இணைந்து விட்டது என்றாா் அவா்.